Back To List

V-United Weekend Games V7 Cricket, Kabaddi And Football!

வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நேற்று (04/11/2017) காலை காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்தில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புத்தம்புதிய வடிவில் 7 வீரர்கள் பங்கேற்கும் V 7 கிரிக்கெட் போட்டி துவங்கியது.

லீக் போட்டிகள் 5ஆம் தேதி முடிவுற்றது. அதன் இறுதியில் FAAMS, K-United "A", HK Thunders மற்றும் K-United "B" ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற சனிக்கிழமை (11/11) காலை 9 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் FAAMS அணியினரை எதிர்த்து K-United "A" அணியினரும். காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் HK Thunders அணியினரை எதிர்த்து K-United "B" அணியினரும் விளையாட உள்ளனர்.


இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து அயல்நாட்டில் தாய்மண் மனத்துடன் வீ-யூனைடெட் குழுமம் நடத்தும் கபடி போட்டி ஹாங்காங் Chung Hom Hok Beach-ல் நடைபெற உள்ளது.



இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி முதல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் 13 வயதுக்குற்பட்ட சிறுவர்கள் பங்கேற்கும் ஐவர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.