Back To List

V United "ARR Cup" KPL Football Juniors& Sub Juniors 2018 : Results of Sixth Day matches!

ARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது.

இன்று (28/04) காலை நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் LTS GA Soccers அணியும், Smile Soccers அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக LTS GA Soccers அணியின் Yahya தேர்வு செய்யப்பட்டார்.

சப்ஜுனியர்ஸ் பிரிவின் முதல் போட்யில் Hameed Stars அணியும் Kayal United அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal United அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal United அணியின் Yasin தேர்வு செய்யப்பட்டார்.

ஜுனியர் பிரிவின்  இரண்டாவது போட்டியில் Muhyideen Rainers அணியும், Yousuf United அணியும் விளையாடின. இப்போட்டியில் Yousuf United அணியினர் 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Yousuf United அணியின் Husaim தேர்வு செய்யப்பட்டார்.

மாலையில் நடைபெற்ற ஜுனியர் பிரிவின் முதல் போட்டியில் Knight Raiders அணியை எதிர்த்து Soccer Smashers அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் Knight Raiders அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Knight Raiders அணியின் Adhil தேர்வு செய்யப்பட்டார்.

ஜுனியர் பிரிவின் இரண்டாவது போட்டியில் Faams அணியும் Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் Faams அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் சிறந்த வீரருக்கு ANWAAR AL KHALEEJ நிறுவனம் வழங்கும் பரிசிற்காக Kayal Manchester அணியின் Seyed Mohames தேர்வு செய்யப்பட்டார்.