Back To List
POM4
Day 4

V-United ARR Trophy Kayal Premier League 2017 : Fourth Round Match Results!

"ARR கோப்பைக்கான" வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2017 : கால்பந்து போட்டிகளின் நான்காம் சுற்று முடிவுகள்!!

வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9ஆம் ஆண்டு "ARR கோப்பைக்கான" காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள்  கடந்த 02/05 அன்று காலை முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

முதல் 7 சுற்றுகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ள இச்சுற்றுப்போட்டியின் நான்காம் நாளான இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் V2000 அணியும், Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டியில் Knight Riders அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் Canton Thunders அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Chelsea அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில், Bangkok Ball Blaster அணியும், 5Sky Sporting அணியும் விளையாடின. இப்போட்டியில் 5Sky Sporting அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

இரண்டாவது போட்டியில் Kayal Express அணியும், Janseva அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Express அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் knight Riders அணியின் வீரர் ஜிஜித், இரண்டாவது போட்டியில் Kayal Chelsea அணியின் அக்கீல், மாலை நடைபெற்ற முதல் போட்டியில் 5Sky Sporting அணியின் அஹமது மற்றும் இரண்டாவது போட்டியில் Kayal Express அணியின் ஹனீஃபா ஆகியோர் சிறந்த வீரருக்கான பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பதக்கமும், ரூபாய் 200 மதிப்புள்ள PHM சிக்கனும் பெறுவதற்கான கூப்பனும் வழங்கப்பட்டது. இப்பரிசுகளுக்கான அனுசரனையை bi3 மற்றும் PHM ரெஸ்டாரன்ட் நிறுவனத்தினர்கள் வழங்குகிறார்கள்.

நான்காம் சுற்று முடிவில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளின் விபரம் வருமாறு...