Back To List
Spot Kick Tournament 2018 : Quality Brother Winner!
வீ-யூனைடெட் நடத்திய கால்பந்து spot kick (சமநிலை முறிவு) போட்டியில் Quality Brothers அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!
ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் We are United by Sports என்ற தாரகமந்திரத்துடன் பல்வேறு போட்டிகளை நடத்திவரும் நமது V-United Sports Academy & Club கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் காயல் மாநகரில் முதன்முறையாக spot kick (சமநிலை முறிவு) போட்டிகளை நடத்தியது.
இப்போட்டியில் United FC, BGF "B", Sivanthi College, V-United, Spanish Soccer, Quality Brothers "A", Veteran's, Star United, V-United Blue, Kayal Tiger, Dark Eagles, Street Birds, Kayal United, V-United Gray, BGF "A", Quality Brothers "B", Sadakathullah College, V-United Red மற்றும் BS ஆகிய 19 அணிகள் பங்குபெற்றன, இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்று லீக் முறையில் நடத்தப்பட்டது. லீக் சுற்றின் முடிவில்BGF "B", Kayal United, Spanish Soccer, BS, Street Birds, Sivanthi College, Quality Brothers "B" மற்றும் Quality Brothers "A" ஆகிய அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இப்போட்டியில் Sivanthi College, Spanish Soccer, Kayal United மற்றும் Quality Brothers "A" ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. பின்னர் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் Sivanthi College மற்றும் Quality Brothers "A" அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாமிடத்திற்கான போட்டியில் Kayal United அணியும், இறுதிப்போட்டியில் Quality Brothers "A" அணியும் வெற்றிபெற்றன. வெற்றிபெற்ற Quality Brothers "A" அணிக்கான பரிசுத்தொகையை சகோ. L.T.S. சித்தீக் அவர்களும், இரண்டாமிடம்பிடித்த Sivanthi College அணிக்கான பரிசுத்தொகையை சகோ. சொளுக்கு முஹம்மது தம்பி அவர்களும், மூன்றாமிடம் பிடித்த Kayal United அணிக்கான பரிசுத்தொகையை சகோ. முஹம்மது அலி அவர்களும் வழங்கினார்கள்.
இப்போட்டிகள் சிறப்பாக நடத்திமுடிக்க உதவியா எல்லாம்வல்ல இறைவனுக்கும், போட்டிகள் நடத்த அணிகள் தந்துதவியவர்களுக்கும், அணுசரணை வழங்கிய காயல்பட்டினம் KFC நிறுவனத்தினருக்கும், போட்டிகள் சிறப்புடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்த சகோ. முஹம்மது அலி, சகோ. கைசாலி, சகோ. முஹம்மது மெய்தீன், சகோ. ஜமால் மற்றும் V-United Sports Academy & Club-ன் விளையாட்டு வீரர்கள், ஆதரவாளர்கள், போட்டிகளை கண்டுகளித்த ரசிகபெருமக்கள் அனைவருக்கும் V-United Sports Academy & Club-ன் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.