Back To List

Bangkok Ball Blasters, 2nd Annual Tamil Thai International Seven football Tournament 2017 : Kayal Veterans Won the Cup! V-United Runners!!

தாய்லாந்து தலைநகர் பேங்காங்கில் Bangkok Ball Blaster கால்பந்து அணியின் சார்பாக 2ஆவது தமிழ்தாய் கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. அதுகுறித்து பேங்காங் பால் பிளஸ்டர்ஸ் அணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாவது :-
 
தாய்லாந்து தலைநகர் பேங்காங்கில் Bangkok Ball Blaster கால்பந்து அணியின் சார்பாக கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 2ஆம் ஆண்டு தமிழ் தாய் கோப்பைக்கான சர்வதேச எழுவர் கால்பந்து போட்டி சாக்கர் ப்ரோ(soccer pro) உள்ளரங்க மைதானத்தில் வைத்து நடத்தப்பட்டது.
 
இப்போட்டியில் பேங்காங், ஹாங்காங் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து, Thailand FC, Kayal Veterans FC, V-United SC, Bangkok Ball Blasters, Rebel FC மற்றும் Bangkok FC ஆகிய 6 தலைசிறந்த அணிகள் பங்கேற்றன.
 
முதல் சுற்றுப்போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றன. இதில் அதிக புள்ளிகளை எடுத்த Bangkok Ball Blasters, V-United SC, Thailand FC மற்றும் Kayal Veterans FC அணிகள் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
 
முதலாவது அரையிறுதிப்போட்டியில் Bangkok Ball Blasters அணியினர் Kayal Veterans அணியினரை எதிர்த்து விளையாடினார்கள். போட்டியின் இறுதியில் இரண்டு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்ததால் சமநிலைமுறிவு முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் Kayal Veterans அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
 
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் V-United அணியினரை எதிர்த்து Thailand FC அணியினர்கள் விளையாடினார்கள். இப்போட்டியில் V-United அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.
 
பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியின் ஆட்டநேர இறுதியில் இரண்டு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனையடுத்து நடைபெற்ற சமநிலை முறிவுமுறையில் Kayal Veterans அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2ஆம் ஆண்டு தமிழ் தாய் கோப்பையை தட்டிச்சென்றது.
 
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் துவக்கமாக இறைமறை வசனத்தை ஹாஃபிழ் முஜாஹித் அலி ஓதினார். தொடர்ந்து போட்டித்தொடரின் மூத்தவீரர் ஜனாப். இப்றாஹீம் (Bangkok Ball Blaster) அவர்களுக்கும், இறுதிப்போட்டியின் சிறந்த வீரர்களாக தேர்வுசெய்யப்பட்ட Kayal Veterans அணியின் காழி அலாவுத்தீன் மற்றும் V-United அணியின் நெய்னா ஆகியோர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
 
போட்டித்தொடரில் அதிக கோல் அடித்த வீரராக Bangkok Ball Blasters அணியின் வீரர் ஹனீஃபா, போட்டித்தொடரின் சிறந்த வீரராக V-United அணியின் லத்தீஃப், சிறந்த பின்கள வீரராக Bangkok Ball Blasters புஹாரி, சிறந்த கோல் கீப்பராக Kayal Veterans அணியின் அலாவுத்தீன் மற்றும் சிறந்த இளம் வீரராக V-United அணியின் வாவு S.H. அப்துல் கஃப்பார் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு, பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்வின் தொடராக வெற்றிக்கு முனைந்த V-United அணியின் வீரர்களுக்கு பதக்கங்களும், கோப்பையும் வழங்கப்பட்டது.
பின்னர் வெற்றிபெற்ற Kayal Veterans அணியின் வீரர்களுக்கு தாய்லாந்து ஜெம் & ஜுவல்லரி சங்கத்தின் முன்னால் தலைவர் திரு.ஸொம் ச்சய்(som chai) அவர்களால் பதக்கங்களும், கோப்பையும் வழங்கினார்.
 
இறுதியாக நன்றியுடையுடன் பரிசளிப்புவிழா இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ். அனைத்து நிகழ்வுகளையும் சகோ. வாவு M.N. காதர் சாஹிப் தொகுத்து வழங்கினார்.