V-United Blossoms Cup KPL Football Will Start On May 25th!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த 6 வருடமாக, வல்ல இறைவனின் துணையுடன் - காயல் நகர விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடன் காயல் பிரிமியர் லீக் (KPL) கால்பந்து, கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகளை வீரர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காகவும், ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாகவும் நடத்தி வருகின்றது.
அதன் வரிசையில் இவ்வருடம் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே மாதம் 25-ம் தேதி முதல் V-United, Blossoms கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் (KPL) கால்பந்து போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புகின்ற வீரர்களுக்கான விண்ணப்ப படிவம் இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.
அதுபோலவே V-United, Blossoms கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் (KPL) கிரிக்கெட் போட்டிக்கான தேதி குறித்த அறிவிப்பும், விண்ணப்பமும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.
இப்போட்டிகள் சிறப்புன் நடைபெற, வழமைபோல் நமதூரின் விளையாட்டு மைதாங்கள் மற்றும் வீரர்களின் ஒத்துழைப்பை நாடுகிறது V-United, Blossoms Cup காயல் பிரிமியர் லீக் (KPL) சுற்றுப் போட்டிக் குழு.