Back To List

Haji VMS lebbai new Stadium opening Ceremony!

ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானத்தை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் KAM முஹம்மது அபூபக்கர் திறந்துவைத்தார்!

ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பாக காயல்பட்டினம் கடற்கரைக்கு அருகில் காயல்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் மர்ஹூம் ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை அவர்களின் பெயரில் புதிய மைதானம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தின் திறப்புவிழா கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. இதனை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், காயல் மண்ணின் மைந்தனுமான ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் திறந்துவைத்தார்கள்.

இத்திறப்புவிழாவிற்கு ஹாஜி வி.எம்.எஸ். அமீன் அவர்கள் தலைமைதாங்கினார்கள், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் திரு. சம்பத், வாவு ஆப்தீன் ஹாஜி, ஜனாப். எம்.ஐ.பஷீர், ஜனாப். எஸ்.எம். ரஃபீ, ஜனாப். சதக்தம்பி, ஜனாப். வாவு எம்.எம். சம்சுத்தீன் ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.

நிகழ்வின் துவக்கமாக வாவு அம்ரு இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து ஜனாப். லரீஃப் வரவேற்புரையாற்றினார்.

பின்னர் ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் திரு. சம்பத், ஜனாப். சதக்தம்பி, ஜனாப். எஸ்.எம். ரஃபீ, ஜனாப். எஸ்.ஏ.கே. மெய்தீன், ஜனாப். சலாஹூத்தீன், ஜனாப். இப்னு சவூத், ஜனாப்.துளிர் சேக்கனா லெப்பை, வழக்கறிஞர் ஜனாப். அஹமது மற்றும் சிறப்பு விருந்தினர் ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் 10ஆம் ஆண்டு வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிக்கான அணிகளின் ஜெர்ஸிகள் அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வும், இம்மைதானம் அமைப்பதற்கு உழைத்தவர்கள் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்ச்சிகளை சகோ. லரீஃப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.