Back To List

V-United Conducting Year End Games

டிச:25 முதல் வீ-யூனைடெட் நடத்தும் ஆண்டிறுதி கால்பந்து & கிரிக்கெட் போட்டிகள்!
 
ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் We are United by Sports என்ற தாரகமந்திரத்துடன் பல்வேறு போட்டிகளை நடத்திவரும் நமது V-United Sports Academy & Club தற்போது இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஹாஜி VMS லெப்பை நினைவு மைதானத்தில் 2018ஆம் ஆண்டுக்கான ஆண்டிறுதி கால்பந்து போட்டிகளை 14 வயதுக்குற்பட்டோருக்கு பிரத்யேகமாகவும், வயதுவரம்பின்றி அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரத்யேகமாக நடத்தவும், 14 வயதுக்குற்பட்ட சிறுவர்களுக்கான பாக்ஸ் கிரிக்கெட் போட்டிகளை பிரத்யேகமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
 
இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள அணியினர்கள் டிசம்பர் 16ஆம் தேதி இரவு 8 மணிக்குள் நுழைவுக்கட்டணத்தை செலுத்தி V-United Sports Academy & Club மைதான அலுவலகத்திலோ அல்லது சகோ. முஹம்மது அலி (9366661600) சகோ. கைசாலி (8148245006) ஆகியோர்களை தொடர்புகொண்டோ பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.