Back To List

V-United Kayal City Champions 2018 : Under 14 Schedule!

வீ-யூனைடெட் நடத்தும் ஆண்டிறுதி Kayal City Champions 2018 கால்பந்து 14 வயதுக்குற்பட்டவர்களுக்கான போட்டி நிரல் வெளியீடு!
 
ஹாங்காங் மற்றும் காயல்பட்டினத்தில் We are United by Sports என்ற தாரகமந்திரத்துடன் பல்வேறு போட்டிகளை நடத்திவரும் நமது V-United Sports Academy & Club தற்போது இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 22ஆம் தேதி முதல் காயல்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஹாஜி VMS லெப்பை நினைவு மைதானத்தில் 2018ஆம் ஆண்டுக்கான Kayal City Champions 2018 கால்பந்து போட்டிகளை 14 வயதுக்குற்பட்டோருக்கு பிரத்யேகமாகவும், வயதுவரம்பின்றி அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரத்யேகமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
 
இப்போட்டியின் துவக்கமாக 14 வயதுக்குற்பட்ட சிறுவர்கள் பங்கேற்கும் ஐவர் கால்பந்து போட்டியின் நிரல் தற்போது வெளியிடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வயதுவரம்பின்றி அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைபெற உள்ள கால்பந்து போட்டியின் நிரல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
 
நகரின் சிறுவர்கள்,  இளைஞர்கள் என மொத்தம் 259 கால்பந்து வீரர்கள் பங்கேற்கவிருக்கும் இப்போட்டிகளை ஆரம்பம் முதல் கண்டுகளிக்க கால்பந்து ரசிகர்களை அன்போடு அழைக்கின்றது வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் அகடமி மற்றும் கிளப்.